Header Ads



ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தவரின் நிலை


நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து, இளைஞன் ஒருவர் நேற்றிரவு -19- தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு, ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற ரயில், சில்லில் சிக்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட இளைஞன் நுவரெலியா, லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த இளங்கோவன் கோவர்தனன் (வயது20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


செ.திவாகரன்

No comments

Powered by Blogger.