Header Ads



இந்த மாணவியைக் கண்டால், உடனடியாக அறிவிக்குமாறு தந்தை வேண்டுகோள்


மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.


குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் - 10இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 


மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர்  மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இதையடுத்து, இன்றைய தினம் (19) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு  கோரிக்கை விடுத்துள்ளார். 



No comments

Powered by Blogger.