இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட முயற்சித்த, முகமது சர்பாராஸ் வபாத்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சர்பாராஸ் என்ற 16 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மீது மோகம் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வெளியிட்டு அதில் பிரபலம் அடைவதை விரும்பிய சர்பாராஸ், ரீல்ஸ் எடுக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன் கிழமையன்று மதிய வேளையில் தன் பெற்றோரிடம் தொழுகைக்கு செல்கிறேன் என கூறி விட்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.
சர்பாராஸ் தனது நண்பர்களான முஸ்மில் மற்றும் செளஹால் ஆகியோருடன், அருகே உள்ள ரயில் தண்டாவளத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு ரயில் வரும் சமயத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க வேண்டுமென சர்ப்பராஸ் கூறியதும், அதற்கு நண்பர்கள் வேண்டாமென தடுத்தும் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
சரியாக ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தின் முன் நின்று, வீடியோ எடுக்க முயல தவறுதலாக அவர் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment