முக்கிய அறிவிப்பு
மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று -12- முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (12.05.2023) இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில்,
முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாத யாரும் இனிமேல் வெளிநாட்டு கடவுச்சீட்டுப் பெற அந்த திணைக்கள அலுவலகம் வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அவசரமாக வெளிநாட்டு கடவுச்சீட்டுதேவை என்று நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூடியவர்கள் மட்டுமே தமது திணைக்கள அலுவலகத்துக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் எந்தவித சிரமமும் இன்றி கடவுச்சீட்டைப் பெறுவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எனினும் அவசரத் தேவை தொடர்பான சந்தர்ப்பத்தில் அதற்கான உரிய ஆவணங்களைச் சரிபார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அந்த நபர் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment