நாட்டில் கொலைகள் அதிகரிப்பு (புள்ளிவிரங்கள் இணைப்பு)
மேலும், இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில், "2019 ஆம் ஆண்டில் 273 கொலைகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவாகியுள்ளன. இது தினசரி 1.6% அதிகரிப்பாகும். இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்புடையதல்ல." என்று குற்றப் பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கு வெற்றிகரமான வலுவான புலனாய்வு வலையமைப்பை இலங்கை பொலிஸார் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
Post a Comment