Header Ads



அனுராதாவை அனுப்பாதீர்கள்


கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் அனுராதா யாஹம்பத்தின் குறித்த பதவியில் நீடிக்குமாறு கோரி மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருகோணமலை-உப்புவெளி பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று (08.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்ததாவது, 


கடந்த மூன்று வருட காலமாக கிழக்கு மாகாணத்தினுடைய ஆளுநராக செயல்பட்டு வருகின்ற அனுராதாத யகம்பத் இன மத குல பேதம் இன்றி மாகாணத்தினுடைய அபிவிருத்தி கருதி செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை சிரமமான முறையிலே முன்னெடுத்து வந்த சந்தர்ப்பத்தில் இவரை இடமாற்றுவதன் மூலம் அந்த வேலைகள் இடை நடுவே நிறுத்தப்படும் என்றும் மாகாணத்தினுடைய அபிவிருத்திக்கு அது தடையாக அமையப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். 


கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கக்கூடியவரை ஒன்றரை வருடங்களுக்காவது சேவையாற்ற அனுமதித்து மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். 


கிழக்கு மாகாணத்தினுடைய கல்வி விவசாயம் மற்றும் மத நல்லிணக்கத்தை எழுப்பியவர் எனவும் கடந்த காலங்களில் சேவையாற்றிய ஆளுநர்களை விட தற்போது ஆளுநர் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகின்றார் எனவும் இவரை தொடர்ச்சியாக கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றுவதற்கு ஜனாதிபதி நியமனம் வழங்க வேண்டும் எனவும் சர்வ மத தலைவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.  

1 comment:

  1. அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களும் அபிவிருத்திகளும் ஒரு தனிநபரை அடிப்படையாக வைத்து மேற்கொள்வதில்லை. அவ்வாறு மேற்கொண்டால் அது அரச அபிவிருத்தித் திட்டங்களாக இருக்கமுடியாது. ஆனால் அடிமுடிகள், திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் அந்த திட்டங்களுக்குப்பின்னால் இருப்பின் அந்த குறித்த நபர் இல்லாவிட்டால் அந்த பணிகள் நிறுத்தப்படும் என்ற ஒரு நரித்தந்திரத்தையும் பரப்பலாம். அந்த நபரின் பின்னால் ஏன் இந்த மதவாதிகள் இருக்கவேண்டும் என்ற ஒரு பெரிய கேள்விக்குறி சமூகத்துக்கு தோன்றியுள்ளது. அது பற்றி உண்மைத்தன்மையை யாராவது இங்கு பதிவார்களா?

    ReplyDelete

Powered by Blogger.