ஆன்மீகத் தலைவராக மகிந்த
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைமைத்துவம் கடந்த மே மாதம் பெரமுனவின் மேடையில் வெற்றிக் கூச்சல்களுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டார்.
அரசியலில் ஓரளவு புரிதல் உள்ளவர் அதை புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
கட்சியின் தலைமைப் பதவிக்கு பசில் ராஜபக்சவின் பெயரைக் கூறுவதற்கு தாம் பயப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கட்சியின் ஆன்மீகத் தலைவர் மகிந்த ராஜபக்ச என்றும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த அதிபர் வேட்பாளராக பசில் ராஜபக்ச வரலாம் என்றும் அவர் கூறினார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆம் கடுகம்பி பானம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், கடுகம்பி பானப்பிரியர்களுக்கும் இவர் ஒரு ஆன்மீகத் தலைவர். அன்றாட வாழ்க்ைகயில் நடுநிலைமையாக வாழ்ந்து வந்த அறுபத்தி இரண்டு இலட்சம் பேரும் இந்த 'ஆன்மீகத் தலைவருக்கு' தலைப்பாகை சூட்ட அடுத்த தேர்தல் வரும் வரை காத்திருக்கின்றார்கள்.
ReplyDelete