Header Ads



ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக சீறிய சமூக செயற்பாட்டாளர்


மக்களின் இரத்தத்தின் மேல் ஆட்சிக்கு வந்த கோட்டாபயவிற்கு என்ன நடந்தது என்று முழு நாட்டிற்கே தெரியும். மகிந்த ராஜபக்ச அதை சொல்லி தர தேவையில்லை என சமூக செயற்பாட்டாளர் ஷிரந்த தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம்(07.05.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.


இதேவேளை மகிந்தவின் மே தின உரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கூறுகையில்,


“கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்ததென்று எமக்கு தெரியும் மகிந்த ராஜபக்ச அவர்களே. எமக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் எமக்கு சொல்லித்தர வேண்டியதில்லை.


மக்களின் இரத்தத்தின் மேல் ஆட்சிக்கு வந்த அவருக்கு என்ன நடந்ததென்று முழு நாட்டுக்கே தெரியும். ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த நாட்டை ஒன்றிணைத்த ஆர்ப்பாட்டக்கார்கள் பற்றியும் மக்களுக்கு தெரியும்.


உங்களை போன்ற ஊழல்வாதிகள் மேடைகளில் ஏறும் போது ஊ சத்தமிட முடியுமானவர்களை உருவாக்கிய ஆர்ப்பாட்டம் குறித்து தெரியும். உம்மை போன்றும் உங்கள் மகன்மாரை போன்றும் இந்த நாட்டை நாசம் செய்பவர்களுக்கு எதிராக குரலெழுப்ப முடியமானவர்களை உருவாக்கிய ஆர்ப்பாட்டம் குறித்தும் எமக்கு தெரியும்.”என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.