பீதியில் உள்ள ரணில், கொழும்பில் மேற்கொண்ட நடவடிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சத்தில் உள்ளார். அவர் தொடர்பிலான மக்களின் நிலைப்பாடு என்னவென்று அவருக்குத் தெரியும். அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் அண்மையில் கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார் இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கே இந்த நிலைமை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட - மக்கள் ஆணை அறவே இல்லாத ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.
ரணில் மக்களுக்கு மட்டுமல்ல மக்களின் நிழலுக்குக்கூட அஞ்சுகின்றார். அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் அண்மையில் கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment