சிறுவர்களை கடத்தும் கும்பலென, இளைஞர்களை சுற்றிவளைத்த பொதுமக்கள்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடாடிய 3 பேர் கொண்ட இளைஞர் குழுவை பொது மக்கள் சுற்றிவளைத்து மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
குருக்கள்மடம் வீதி வளைவை அண்மித்த வீதியில் நேற்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணியளவில் சந்தேகத்துக்கு இடமாக 3 இளைஞர்கள் நடமாடிக் கொண்டிருப்பதை அந்தபகுதி மக்கள் அவதானித்த நிலையில் அவர்கள் சிறுவர்களை கடத்தும் கும்பல் என கருதி அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதன்போது அங்கிருந்த இரு இளைஞர்கள் தப்பி ஓடியதையடுத்து ஒருவனை பொதுமக்கள் மடக்கிபிடித்து நையப்புடைத்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment