பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம், வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்
டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12 நிறுவனங்களுக்கு நோயாளிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு கட்டணம் வசூலித்ததற்காக 9.4 மில்லியன் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மூத்த புலனாய்வு அதிகாரி ஏ.யு.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் வழங்கிய நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட CAAயின் விசேட சோதனைப் பிரிவினால் கடந்த நான்கு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன என மூத்த புலனாய்வு அதிகாரி ஏ.யு.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Post a Comment