சிறுவர் கடத்தல் அச்சத்தில், வாகனத்தை அடித்து நொறுக்கிய மக்கள்
கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனும் சந்தேகத்தில் வியாபாரத்துக்கு வந்த வாகனம் ஒன்றை கிராம மக்கள் இணைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
அத்தோடு வாகனத்தில் வந்த இருவரையும் தாக்கியதில் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வடக்கில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என சிறுவர்களை கடத்தும் செய்திகள் இன்று பேசுபொருளாக உள்ள நிலையில், சந்தேகம் கொண்ட கிராமத்தவர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வியாபாரத்துக்கு என வாகனத்தில் வந்த இருவரும் சகோதர மொழியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கூறும் மொழி புரியாமல் மக்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment