இலங்கையில் அதிசயமான கன்றுக்குட்டி - பார்க்கப் படையெடுக்கும் மக்கள்
வவுனியா பாலமோட்டை பகுதியில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.
பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று 5 கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்று மக்களை அதிசயிக்க வைத்துள்ளது.
குறித்த கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வருமானம் ஈட்டுவதற்கு மாடுகளை வளர்த்து வருகின்றார்.
குறித்தநபர் வளர்த்து வரும் மாடு 5 கால்களுடன் கன்று ஒன்றினை பிரசவித்த நிலையில் குறித்த கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இன்றைய தினம் கன்றினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிராம மக்கள் சென்று அதிசய கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு குறித்த கன்று நன்றாக பால் அருந்தியும், ஓடி விளையாடியும் வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment