இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா..?
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளுக்குத் தகுதி பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை இணங்கியுள்ளது.
எனவே, மேலும் புதிய சுற்றுச் சலுகைகள் அறிவிக்கப்படும்போது அவற்றை மீளப் பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பணிப்பாளர் ஷோபினி குணசேகர தனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைசி ஜி.எஸ்.பி. பிளஸ் மதிப்பாய்வு அறிக்கையை அடுத்த மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடவுள்ளது.
இலங்கை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் முன்னுரிமை அந்தஸ்துக்கு மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
Post a Comment