Header Ads



அக்‌ஷரா டீச்சரும், வீரவன்சவும்


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நூலொன்றை வெளியிட்டார். அந்த நூலுக்கு ‘ஒன்பது  மறைக்கப்பட்ட கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.


காலி முகத்திடல் போராட்டத்தை மையப்படுத்தியதாக அது எழுதப்பட்டுள்ளது. நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் பிரமுகர்களுக்கு அப்பால், தனக்கு தரம் 5 முதல் 10வரை கல்வி கற்பித்த அக்‌ஷரா டீச்சரையும் விமல் வீரங்ச அழைத்திருந்தார்.


விமலின் அழைப்பையேற்று ஆசிரியரும் அங்கு வந்திருந்தார். விழாவில் உரையாற்றிய விமல், எனது ஆசிரியரும் வந்துள்ளார். போராட்டத்தின் ஆரம்பத்தில் அவரும் கோல்பேஸ் பக்கம் சென்றவர்தான்.


போகும்போது எனக்கு சொல்லவில்லை. போய் வந்த பின்னரே அது பற்றி தெரியப்படுத்தினார். அவருக்கு நான் எதுவும் சொல்லப்போகவில்லை. சிலவேளை, மாணவர்களாலும் ஆசிரியர்களுக்கு கற்பிக்க முடியும் எனக் தெரிவித்தாராம்.


நூல் வெளியீட்டு விழா முடிந்த பின்னர் விமலிடம் வந்த அக்‌ஷரா டீச்சர்,விமல் நீங்கள் சொன்னது சரிதான், இன்று உங்களிடம் பல விடயங்களை கற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது என சிரித்தப்படியே கூறினாராம். 




1 comment:

  1. இந்த கொம்ஹரக்கின் பேச்சுக்களும், உளரல்களும் எந்த மேடைகளிலும் தற்போது எடுபடுவதில்லை. அந்த மோசமான நிலைமையை முன்வைத்து யாரோ ஒரு கொம் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் பொய்யை முன்வைக்கும் ஒரு வழிதான் சில உண்மைகளை அதில் கலப்பது. அந்த வேலையைத்தான் இந்த கொம்ஹரக் செய்துள்ளார். இந்த நூலை வாசிக்கவும் அதனை அலசவும் இந்த நாட்டு மக்களுக்கு தற்போது எந்த வகையிலும் சந்தர்ப்பங்கள் இல்லை. எனவே எத்தனையோ பொருட்கள் இறுதியில் அசுத்தத்துடன் அகப்பட்டு அழிந்து போகும் என்ற வகையில் இதுவும் அதில் உள்ளடங்களும்.

    ReplyDelete

Powered by Blogger.