மகனே தந்தையை அடித்துக்கொன்ற கொடூரம்
களுத்துறை மாவட்டத்தில் குடிபோதையில் புதல்வன் தன் தகப்பனை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய்த்தர்க்கம் தந்தையும், மகனும் மது அருந்திவிட்டு வீடு வந்திருந்த நிலையில் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தந்தை மீது மகன் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக அதே இடத்தில் 73 வயதான தந்தை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து 32 வயதான மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment