Header Ads



தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட துயரம்


இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி இன்று (17) உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.


இதேவேளை நீரில் மூழ்கிய நிலையில் (16ம் திகதி) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போது இன்று (17) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் தமிழ்நாடு- திருநெல்வேலி 76/A சர்க்கரை விநாயகர் வீதியில் வசித்து வரும் கஸ்தூரி ரங்கன் ஜெயசூர்ய (26வயது) எனவும் தெரிய வருகின்றது.


<
p style="text-align: justify;">  இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட பைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


அதன்படி குறித்த இளைஞரின் உறவினர்கள் திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில் சடலத்தை இந்தியா கொண்டு செல்வதற்குறிய ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றனர்.


மேலும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.