அரகலயவினால் தேவையற்ற பிள்ளைகள் பிறக்கின்றன - அமைச்சர்
அரகலய உறுப்பினர்கள் தமது முறையற்ற பிள்ளைகளை புகையிரத மார்க்கத்தில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரகலய உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் தேவையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் தமது பிள்ளைகளை புகையிரத மார்க்கத்தில் வீசி விடுகின்றனர்” என அமைச்சர் அபிவிருத்தி அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
“அரச நிறுவனங்களிலும் அரகலய உறுப்பினர்கள் இருந்தனர். இன்னொரு அரகலயவைத் தொடங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஒருவருக்கு உரிமை உண்டு ஆனால் அரசை சீர்குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு அரசை சீர்குலைப்பது என்பது பயங்கரவாதச் செயல்” என்றார்.
தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு தான் எப்போதும் அனுமதித்துள்ளதாகவும் ஆனால் அவற்றுள் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உதவத் தயங்கப் போவதில்லை எனவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment