ஆயிரக்கணக்கான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டது
தம்புள்ளை பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது.
ஒரு தொகுதி கழிவு தேயிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த கழிவுத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
வெலம்பொட, வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment