Header Ads



உலகில் முதன்முறையாக


உலகில் முதன்முறையாக தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தைக்கு மூளை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த தனித்துவமான அறுவை சிகிச்சையின் அறிக்கைகள் அமெரிக்காவிலிருந்து வெளியாகியுள்ளன.


அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 34 வாரங்கள் தாயின் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டமை தற்போது பேசும் பொருளாகியுள்ளது.


மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குறித்த தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளமையும் விசேட அம்சமாகும்.


சுமார் 30 வாரங்களில் ஸ்கேன் செய்து பார்த்ததில், மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


இதனடிப்படையில், பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை வைத்தியர்கள் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.


பிறக்கும் குழந்தைகளின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாகவும், 50 முதல் 60 சதவீதம் பேர் இவ்வாறான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதுபோன்ற குழந்தைகளின் இறப்பு விகிதம் சுமார் 40 சதவிகிதம் என்றும், அவர்களுக்கு மூளை பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வலுவான போக்கு இருப்பதாக மருத்துவர்கள் மேலும் கூறுகிறார்கள்.


oruvan


No comments

Powered by Blogger.