அமைச்சர் பற்றி வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்
குறைந்த விலையில் மருந்துகளைக் கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனங்கள் உள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார செயலாளர் அமைச்சரவை பத்திரத்தை தயாரித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
நுகேகொடையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் பேரில் இவ்வாறான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டால், மற்றவர்களின் தாளத்துக்கு நடனமாடி பிரச்னைகளில் சிக்கவேண்டாம் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளரை அவர் எச்சரித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் இந்திய நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கண் தொற்றுக்கு பயன்படுத்தப்படும் பல மருந்துகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அவற்றைப் பயன்படுத்திய பின்னர் பல ஒவ்வாமைகளை அடைந்து பார்வையற்ற ஒரு நோயாளி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் தொற்றுக்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்து போத்தல்களில் கிருமிகள் இருப்பதை அரசு ஆய்வகம் உறுதி செய்துள்ளது.
இவ்வாறான செயல்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு ஒப்பானது.
மேலும், நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் இந்த மருந்துகள் ஏன் சரியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பது சிக்கலாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Post a Comment