Header Ads



அங்கே “தமிழர் இல்லை”, இங்கே “தமிழர் இல்லை” என டென்சன் ஆகக்கூடாது - “இனவாத சனியன்கள்” தருவதில்லை.


- Mano Ganesan Mp -


கடைசி பந்தில் விளாசி “ஜடேஜி”ட்டுட்டார்கள். கடைசியின் போது, பவிலியனில் டென்சனாகி தலைகுனிந்து பிரார்த்தனையில் இருந்த “கூல்” தோனியை காட்டி மகிழ்ந்தார்கள். கொடுத்த காசுக்கு, மேலயே கூவி, நல்ல பிரயோசனம் தந்த நல்ல கிரிகட். ஷிவம் தூபேக்கு கடைசி பந்துகள் கிடைக்கவில்லை என கவலை. 


இனிமேல் தமிழ்நாட்டை விட்டு குஜராத்திலேயே செட்டிலானால், சுதர்ஷனுக்கு இந்திய அணியில் இடம் நிச்சயம். நம்ம பசங்களும் சென்னை பெண்களை மணந்து அங்கேயே நின்று விட்டால், கிரிக்கட்டில் நல்ல காசு பார்க்கலாம். எனது பக்கத்து வீட்டு பையன் ஹர்திக் பாண்ட்யாதான் உண்மையில் “மிஸ்டர் கூல்”. (இதைவிட கிரிகட் எழுதினால், என் தொழில் மாறிவிடும்!)


இன்னொரு விவகாரம். “மைதானத்தில் விளையாடும் அவர்களே” ஆகாத அளவுக்கு  முகநூல் தம்பிகளும், தங்கைகளும், அங்கே “தமிழர் இல்லை”, இங்கே “தமிழர் இல்லை”, என டென்சன் ஆகக்கூடாது. 


இலங்கையர் என்பதால் “நம்ம பசங்கள்” என்றேன். மற்றபடி, CSK-சென்னை என்றால் தமிழ், GT-குஜராத் என்றால் குஜராத்தி, என்றெல்லாம் கிடையாது. விளையாட்டு இன்று பணம் காய்க்கும் மரம். நல்ல விளைச்சல் தரும் எதையும் வாங்கி போடறார்கள். 


அணிகளில், திறமைக்குதான் இடம். அதுதான் விளையாட்டு. ஆனால், நம் நாட்டில், அந்த இடத்துக்கு வருவதற்கு வழிகள், "சிங்களவர் அல்லாதவருக்கு", இந்த “இனவாத சனியன்கள்” தருவதில்லை. அப்படியே ஓரிருவர் வந்தாலும் கடைசி தேர்வில் வெட்டுகிறார்கள். அதையும் மீறி வந்தால் பெருங்கோடிஸ்வரராக இருக்கனும். 


இவற்றைத்தான் நாம் மாற்றனும். "அதற்குதான், அண்ணே, உங்களை அனுப்புகிறோம்" என அட்வைஸ் செய்யாதீர்கள். அதையும் அணைத்துதான் என் போராட்டம். முகநூலில் எழுதுவது போல் இது இலேசான காரியமில்லை.  


நீங்கள் வாக்களிக்கும் எத்தனை பேர் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், போராடுகிறார்கள் என தேடுங்கள். தேடி ஆளை மாற்றி அனுப்புங்கள்.

No comments

Powered by Blogger.