Header Ads



இலங்கையில் தங்க விலை, தொடர்பான இரகசியம்


கொழும்பு செட்டியார்தெரு பகுதியே இலங்கையில் தங்க நகைக்கான கேந்திரஸ்தலம் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


LS க்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும்.


உள்ளூர் தங்கத்தையும், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் தங்கத்தையும் பத்தாயிரம் ரூபா அதிகம் கொடுத்து வாங்கி தான் நகைத் தேவையை சமாளிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.


என்ற போதும் எங்களுக்கு இறக்குமதி சலுகையை அளித்தால், உலக சந்தையில் இருந்து 2000 - 5000 ரூபா வித்தியாசத்தில் இலங்கையில் நகைகளை கொள்வனவு செய்ய முடியும்.


இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான். உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.


எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது போன்று தான் எமக்கு தெரிகிறது. ஆனால் உலக சந்தையில் அதிகரித்தால் கட்டாயம் இலங்கையிலும் கூடும்.


தங்க விலை எவ்வாறு இலங்கையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது இரகசியமாக இருந்த விடயம். ஆனால் இப்போது எல்லோருக்கும் பரவலாக தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.