Header Ads



சருமத்தை வெள்ளையாக்கும் ஊசி ஏற்றி, உயிர்களை இழக்காதீர்கள் - விற்பனை செய்தவர் கைது


இலங்கையில் தடை செய்யப்பட்ட புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தி அழகு சாதன வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் சருமத்தையும் வெண்மையடையச் செய்ய பல்வேறு வகையான ஊசி மருந்துகள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


அதற்கு, புற்று நோயாளிகளின் பக்கவிளைவுகளைப் போக்க, "குளுதாதயோன்" என்ற தடுப்பூசி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.


எனினும், குறித்த தடுப்பூசியை பயன்படுத்த சுகாதாரத் துறைகள் தடை விதித்துள்ளன. இந்த தடுப்பூசி சருமத்தில் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது.


இவ்வாறானதொரு பின்னணியில், அந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோசடி தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.


இந்த மோசடியை மேற்கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக் கணக்குகளில் தொடர் படங்களையும் பதிவிட்டுள்ளார் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.