இரவைக் கழிக்க உதவிய, வழிகாட்டிகளுக்கு ஏற்பட்ட நிலை
கொஸ்லந்த உடடியலும பிரதேசத்தில் இரண்டு இளம் காதலர்களுக்கு அனுமதியின்றி இரவைக் கழிக்க இடம் வழங்கிய சுற்றுலா வழிகாட்டிகள் இருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் திருமதி கே.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
ஹப்புத்தளை மற்றும் பூனாகலை பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற குறித்த பகுதியில் காதலர்கள் இருவர் கூடாரமிட்டுத் தங்கிய பொழுது காட்டு யானையின் தாக்குதலுக்கு இருவரும் இலக்காகியுள்ளதுடன் 23 வயதுடைய காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்த பெண், தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பயிற்சி பெற்று வந்த மாத்தறை கேகனதுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த பெண்ணின் காதலன் (22) விபத்தில் காயமடைந்து தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக பணியாற்றிய இருவரை கொஸ்லந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் நேற்று (13) ஆஜர்படுத்தினர்.
Post a Comment