Header Ads



மைத்திரிபாலவின் சகோதரரிடமிருந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் மோதிரம் எங்கே..?


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் கொண்ட மோதிரம் திருடப்பட்டுள்ளதாக சமிந்த சிறிசேன முறைப்பாடு செய்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


பொலன்னறுவை அத்துமல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து நீலக்கல் பதித்த மோதிரம் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சமிந்த சிறிசேனவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இந்த திருட்டைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இந்த மோதிரத்திற்கு மேலதிகமாக ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா மதிப்பிலான இலங்கை நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

1 comment:

  1. முதலில் பாதுகாப்புத்துறை செய்ய வேண்டிய பணி இந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான மோதிரத்தை வாங்க இவனுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? என்பதைச் சரியாக விசாரணை செய்து அந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்ட கோடான கோடி டொலரும் நிச்சியமாக பொதுமக்களின் பணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவற்றைத் திருப்பிப் பெற்று பாதுகாப்புத் துறை திறைசேரிக்கு ஒப்படைக்க வேண்டும். அதற்கு உரிமை கொண்டாடிய நபரை நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். களவாடிய மோதிரம் பிறகும் களவாடப்பட்டதால் தான் இந்த இரகசியம் வௌிவந்தது. எனவே இந்த பணத்தின் மூலத்தைச் சரியாக ஆய்வு செய்து அதன் உண்மையானஉரிமையாளருக்கு பணமும் மோதிரமும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.