Header Ads



மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.


இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் நேற்று மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.


பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயிருந்தார்.


மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


வா.கிருஸ்ணா


No comments

Powered by Blogger.