அறையை ஒதுக்கிக் கொடுத்த, விடுதி உரிமையாளரின் மனைவி கைது
வயது குறைந்த பெண்பிள்ளையின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணத்தை பெற்றுக்கொண்டு அறையை ஒதுக்கிக் கொடுத்தமை தொடர்பில் அந்த விடுதியின் உரிமையாளரின் மனைவி, இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையிலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமாணவி மாடியிலிருந்து விழுந்து கடந்த 6 ஆம் திகதியன்று மரணமடைந்தார்.
சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்திவரும் பொலிஸார் 19 வயதான இளைஞன் உட்பட மூவரை முதலாவதாக கைது செய்தனர். பிரதான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுவரையிலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த யுவதியின் அலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து, பதற்றமடைந்த யுவதி, யன்னலில் இருந்து கீழே பாய்ந்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.
அதன் உண்மையை கண்டறிவதற்காக, இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காகவே தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மரணமடைந்த யுவதியின் அலைபேசித் தரவுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர். துசித குமார டி சில்வா
Post a Comment