பல்டியடித்தார் ஹரிசன்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் விலகியுள்ளார்.
கட்சியில் இருந்தும், கட்சியின் நடவடிக்கைகளில் இருந்தும் முற்றாக விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாசவின் நடவடிக்கைகளை விமர்சித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதை தனக்கு தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment