Header Ads



நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளாததினால், ஏற்பட்டுள்ள பாதகங்கள்


நாட்டில் டெங்கு வகை 3 செரோடைப் பரவி வருவதாக பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு,பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


புதிய டெங்கு வகையை எதிர்கொள்வதற்கான நோயெதிர்ப்பு சக்தியை நோயாளிகள் வளர்த்துக் கொள்ளாத காரணத்தினால், 2017 ஆம் ஆண்டு முதல் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்ட அனைத்து மாதிரிகளும் டெங்கு 3 செரோடைப் என கண்டறியப்பட்ட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


“நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டெங்குவுக்கு எதிரான நோய்யெதிர்ப்பு அளவைக் கண்டறிய சோதனை செய்யப்பட்டது. 24% மாணவர்கள் நோய்க்கு எதிரான நோய்யெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர். இருப்பினும், திருகோணமலை மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் வைரஸுக்கு எதிரான நோய்யெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர்.


மழைக்காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.