அதிகமாக தூங்காதே, எழுதப்படாத விதியை மாற்றியமைத்த எர்டோகான்
- Fairooz Mahath -
இன்று மே 29.
இஸ்தான்பூலை சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் கைப்பற்றிய நாள்.
துருக்கி என்ற தேசம் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டின் பின் நடந்த முதல் தேர்தலில் "புதிய துருக்கியின் நூற்றாண்டு" என்ற கோஷம் வெற்றிவாகை சூடிய நாள்.
இத்தகைய வெற்றிக்காக வரலாற்றில் நடந்த நல்லாட்சி முனைப்புகள் நசுக்கப்பட்ட நினைவு நாள்.
இஸ்தான்பூலை வெல்பவர் துருக்கியை வெல்வார் என்பது துருக்கிய அரசியலில் ஓர் எழுதப்படாத விதி.
அந்த விதியை இந்த நாளில் மாற்றி அமைத்திருக்கின்றார் அதிபர் எர்டோகான்.
அவர் இஸ்தான்பூலில் மட்டுமன்றி தலைநகர் அங்கராவிலும் தோல்வி கண்டார்.
ஆயினும் ஏனைய பகுதிகளில் வெற்றி கொண்டு இறுதிவெற்றியை உறுதி செய்தார்.
அத்துடன் தேர்தல் வெற்றிவிழாவில் இஸ்தான்பூல் மக்களிடம் கேட்கின்றார்.
"எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலில் இஸ்தான்பூலை மீட்டெடுக்க நீங்கள் தயாரா? "
இப்படி தேர்தல் முடிந்து வீடு போகுமுன் அடுத்த 2024 தேர்தலுக்கு பணியாற்ற தயாராகின்றார்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் கமால் கிழிச்டரொக்ளோவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் நிலைக்கு வந்துள்ளது. அடுத்த தலைவராக அங்கே வரக்கூடிய அக்ரம் இமாம் ஒக்லோ இப்போது இஸ்தான்பூலின் மேயராக இருக்கின்றார். அவரது அரசியல் வளர்ச்சிக்கும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கனவுக்கும் அடிக்கும் ஆப்பு போலவே இஸ்தான்பூலை அவரிடமிருந்து மீட்போமா என்று மக்களிடம் கேட்கின்றார். ஏனெனில் அடுத்த தலைமை மீதான நம்பிக்கை இஸ்தான்பூலை தக்கவைத்து கொள்வதிலேயே தங்கியுள்ளது.
2024 இல் இஸ்தான்பூல் மற்றும் அங்கராவை மீட்க இப்போதே முடிவெடுத்து விட்டார் அயராத உழைப்புக்கு எடுத்துக்காட்டான எர்டோகான்.
இம்முறை இஸ்தான்பூல் மேயர் வேட்பாளராக தனக்கு அடுத்த தலைமைக்கு வர தகுதி கொண்ட ஆளுமைகளுள் ஒருவரான பாதிஹ் அர்பகானை இதற்காக இவர் இறக்கக் கூடும்.
எர்டோகானுடன் முரண்படுவோர் அவரைப்பற்றி எத்தனை மாறான கருத்துக்களை கொண்டிருந்தாலும் அவரது அயராத செயல்பாடுகள் குறித்து எவருக்குமே மாற்றுக்கருத்திருக்க மாட்டாது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் சாவேஸ் ஓக்ளு அதிபருடன் தான் கடமையாற்றிய அனுபவம் குறித்து தொலைக்காட்சியில் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார்.
அதிபர் எந்த நேரத்திலும் அலைபேசியில் அழைப்பெடுத்து என்னுடன் பணிகள் பற்றி பேசுவார். அது இரவு இரண்டு - மூன்று மணி வேளையாகவும் இருக்கும். ஒரு நாள் அவர் எடுத்த அழைப்பை நான் கவனிக்கவில்லை. மறுநாள் என்னிடம் " சாவேஸ் நீ அதிகமாக தூங்குகின்றாய்" என்று குற்றம்சாட்டினார். இல்லை நான் எனது மொபைலை சார்ஜில் போட்டு விட்டு வேறு அறையில் இருந்தேன், அதனால் உங்களது அழைப்பு வந்தது தெரியவில்லை என்று பதில் கூறினேன். அதற்கு அவரிடமிருந்து வந்த பதில் " நீ காரணங்கள் கூற வேண்டாம் அதிகமாக தூங்காதே " என்றார். அவரது அந்த அழைப்பு வந்த நேரம் இரவு 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இருக்கும்.
இதுபோல என்னிடம் இல்லாத பல தகவல்களை அவர் அறிந்துவைத்துக்கொண்டு என்னிடம் கேள்வி கேட்பார். அந்நேரம் எனக்கு அது பெரும் சங்கடமாக இருக்கும். எனக்குத்தான் அந்த விடயம் குறித்து எதுவுமே தெரியாதே!
இப்படி தூக்கம் தொலைத்து கட்டியெழுப்பிய தேசத்தின் தலைவனுக்கு சவால் மிகுந்த ஐந்தாண்டுகள் எதிரே உள்ளன.
இதுவரை தனது அரசியல் வரலாற்றில் தான் சந்தித்த எந்தவொரு தேர்தலிலும் தோல்வி கண்டிராத அசாதாரண தலைமைக்கு இனிமேல் தனது திட்டங்களை தோல்வியடைய விடாமல் முன்னெடுக்கும் பணி ஒன்றே பாக்கியிருக்கின்றது.
இந்த உன்னதமான தலைவர் எர்டோகான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் வாசிக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஒரு தலைவர், நாட்டு மக்களுக்கு அவசியமான பணிகளை முன்னெடுக்காவிட்டால் ஒருபோது மக்கள் அவரை ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள். அமெரிக்கா, ஐரோப்பா, உற்பட லூத் நபியின் சமூகம் செய்த கெட்டபாவத்தைத் தண்டித்து அந்த தீய செயலுடன் தொடர்பானவர்களைச் சிறையில் அடைத்து உலகம் முழுவதும் வாழும் லூத் நபியின் வழிகாட்டலைப் புறக்கணித்த கெட்ட சமூகத்தின் எதிர்ப்புக்களையும் சம்பாதித்து, இறுதியாக சில முக்கிய முஸ்லிம்நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து அவருடைய நேர்மை, கடும் உழைப்பு, தியாகம் எல்லாவற்றுக்கும் மேலாக இறையச்சம் ஆகிய உன்னத பண்புகளுடன் இன்று குறிப்பாக துருக்கியையும் பொதுவாக உலகத்தையும் வென்று காட்டி சாதனை படைந்த இந்த உன்னத தலைவரின் முன்மாதிரியை எதிர்கால சமூகம் சரியாகப் பின்பற்றினால் உலகில் தலைசிறந்த உன்னத மனித தலைவர்களையும் உருவாக்கலாம்.
ReplyDelete