ஆளுநர்கள் நியமனத்தில் ரணிலின் நரித் தந்திரம்
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அண்மையில் அதிபரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அருட்தந்தை மா.சத்திவேல் இதனைக் கூறியுள்ளார்.
வடக்கிற்கும், கிழக்கிற்கும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தமிழர்கள் என்பதில் பெருமையடைய எதுவுமில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இதுவரை தமிழர்களை எவரும் ஆளுநர்களாக மற்றும் முதலமைச்சர்களாக நியமிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகண சபையில் அனுபவம் உள்ள செந்தில் தொண்டமானை அந்த மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்காமை மற்றும் வேறொரு தமிழரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை ஆகிய விடயங்களின் பின்னணியில் உள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நரித் தந்திரத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அவரது தேவையை நிறைவேற்றுபவர்களாக மாத்திரம் இருப்பார்கள் எனவும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாது அவற்றை செவிமடுப்பவர்களாக செயற்படுவார்கள் எனவும் அருட்தந்தை மா. சத்திவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Post a Comment