Header Ads



பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்துத் திருமணம்


இந்தியா - கேரளாவைச் சேர்ந்த அஞ்சு மற்றும் சரத் ஜோடியின் திருமணம் தான் இது. ஏழைப்பெண்ணான மஞ்சுவின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் அவரது தாயார் கஷ்டப்பட்டுள்ளார்.


அவர் தனது மகளின் திருமணத்துக்கு உதவுமாறு செருவல்லியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை அணுகியுள்ளார்.


அவர்கள் அந்த பெண்ணுக்கு 10 சவரன் நகை போட்டது மட்டுமின்றி ரூ.20 லட்சம் பணத்தையும் பரிசாக வழங்கி உள்ளனர். 


இதோடு நிறுத்திவிடாமல் அந்த ஜோடியின் திருமணத்தை பள்ளிவாசலிலேயே  நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளனர்.


இதையடுத்து தான் அஞ்சு - சரத் ஜோடியின் திருமணம் செருவல்லியில் உள்ள பள்ளிவாசல் மண்டபங்கள் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடந்துள்ளது. 


பொதுவாக முஸ்லீம்கள் நடத்தும் திருமணத்தில் அசைவ உணவு தான் போடப்படும், ஆனால் இது இந்து முறைப்படி நடந்த திருமணம் என்பதால் இதில் 1000 பேருக்கு சுத்த சைவ உணவை பரிமாறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர் பள்ளிவாசல் நிர்வாகிகள்.


- ரசிகவ் ஞானியார் -




No comments

Powered by Blogger.