உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது..?
இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் கிளாசெனின் அதிரடி சதத்தால் 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலக்கை விரட்டிய பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதம் மற்றும் டு பிளெஸ்சிஸ்-யின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக்குக்கு இடம் அளிக்கவில்லை. உம்ரான் கடந்த சில ஆட்டங்களாகவே அணியில் இடம் கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கே தெரியவில்லை என ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான். அதிவேக பந்து வீச்சுக்காக பரவலாக அறியப்படுபவர். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் 7 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் மூலம் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இந்திய அணியிலும் விளையாடி வருகிறார்.
Post a Comment