"மனதில் ஆயுதம் ஏந்தியவர்களை கைதுசெய்ய வேண்டும்"
கைகளில் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் மனதில் ஆயுதம் ஏந்தியவர்களை கைது செய்யும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றைய தினம் (18.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையவே இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கமையவே கடந்த சில தினங்களாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்கம் என்ற வகையில் நாட்டையும், மக்களையும் பாதுகாப்பது கடமை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படும் போது அதனை அழிக்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் இந்த நாட்டில் செயற்படுகின்றன. எனவே அவர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் சட்ட அமைப்பை தயாரிப்பது எமது கடமை என்றார்.
Post a Comment