சகோதரனும், சகோதரியும் சடலங்களாக மீட்பு
- ஆ.ரமேஸ் -
மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டயாப்பத்தன வடுவா ஆற்றில் குளிக்க சென்று காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரனும், சகோதரியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (06) ) மாலை 05.30 மணியலவில் இடம்பெற்ற இந்த சோகமான சம்பவத்தில் மத்துரட்ட கெட்டயாபத்தனை கிராமத்தில் வசிக்கும் டப்ளியூ. ஜி. தசுனி ப்ரியங்கா (வயது 13) என்ற சிறுமியும், டப்ளியூ. ஜி. அசேல ஹிதுவர (வயது 12) என்ற சிறுவனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுவனின் சடலம், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் மீட்க்கப்பட்டுள்து.
தண்ணீரில் மூழ்கி மாயமான சகோதரி இன்று (07) மாலை சடலமாக மீட்கபட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment