பல இடங்கள் மூழ்கின
கடந்த 24 மணித்தியாலங்களில் காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல பிரதான வீதிகள் மற்றும் பல தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Post a Comment