Header Ads



நீர் ஓடும் ஆற்றிற்கு அருகே, ஒரு வீட்டை தருவாயாக (உண்மைச் சம்பவம்)

 


நான் கூறும் உண்மைக் கதை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் இல் இடம்பெற்றது. 

ஒரு புனித ரமழான் மாதத்தில், ஒரு இறையச்சமும் இறைவிசுவாசமும் நிறைந்த பெண்மணி, இப்தாருக்கு முன் அவரின் பிள்ளைகளை சேர்த்திக்கொண்டு அவளுடன் சேர்ந்து துஆ இறைஞ்சுமாறு அவர்களை பணிக்கும் வழக்கமுடையவளாக இருந்தாள்.


அவள் அவளின் கரங்களை உயர்த்தி; “ஓ...அல்லாஹ்வே, எங்களுக்கு நீர் ஓடும் ஆற்றிற்கு பக்கத்தில் ஒரு வீட்டை தருவாயாக” எனப்பிராத்தித்தாள். அவளின் பிள்ளைகளும் அவ்வாறே கையை உயர்த்தி அதே பிராத்தனையை செய்தனர்.


இதனை அவதானித்த அப்பெண்மணியின் கணவன் அவளைப்பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டு; “நீங்கள் ஒரு வீட்டிற்கு ஆசை வைக்கின்றீர்கள் என்பது புரிகின்றது, ஆனால் ஆற்றிற்குப்பக்கத்தில் ஒரு வீடு என்பதின் அர்த்தம் என்ன? எப்படி இந்தப்பாலைவனத்தினூடாக ஆறு வரும்?” என்றார்.


அப்பெண்மணி; “அதைப்பற்றி கவலைப்படவேண்டாம்; இந்த விவகாரம் எனக்கும் வல்ல நாயன் அல்லாஹ்விற்கும் இடையிலானது. அவன், அல்லாஹ்: “என்னை அழையுங்கள்,நான் உங்களுக்கு பதிலளிப்பேன்” என்கின்றான். ஆகவே அவனிடன் எங்களின் உள்ளத்திற்கு என்ன தோன்றுகிறதோ அதனை மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்பேன்” என்றார்.


 தொடர்ந்து, “ஓ...அல்லாஹ்வே, எங்களுக்கு நீர் ஓடும் ஆற்றிற்கு பக்கத்தில் ஒரு வீட்டை தருவாயாக” எனப்பிராத்தித்தாள். அவளின் பிள்ளைகளும் அவ்வாறே கையை உயர்த்தி அதே பிராத்தனையை செய்தனர்.


 ஒவ்வொரு நாளும் அப்பெண் அவரின் குழந்தைகளுடன் அல்லாஹ்விடன் தனது தேவையை முன்வைத்தார். புனித ரமழான் மாதம் முடிந்ததும் அப்பெண்ணின் கணவன் கேலியாக அவளிடம்: “ இப்போது சொல்லுங்கள்,எங்கே உங்களது ஆறும் வீடும்?” என்றார்.


அப்பெண்மணி உறுதியான இறைவிசுவாசத்துடன்: “எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ், நிச்சயமாக ஒரு வீட்டை எங்களுக்குத்தருவான்; அவன் எங்களது விருபத்தை பூர்த்தி செய்வான்.” என்றார்.


அதன்பின் என்ன நடந்தது என்பதனை அப்பெண் சொல்கிறார்,கேளுங்கள்: 


“நான் சவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை முடிக்கும் தருவாயில் இருந்தேன்.அப்போதுதான் அச்சம்பவம் நடந்தது. எனது கணவர் அஸர் தொழுதுவிட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். ரியாத் நகரில் நங்கறிந்த செல்வந்தர் ஒருவர் அவரை நிறுத்தினார். என் கணவர் அவரை அதற்குமுன் அறிந்திருக்கவில்லை. அம்மனிதர் என் கணவருக்கு சலாம் கூறி விட்டு: ‘எனக்கு ஒரு வீடு இருக்கின்றது. அதன் பாதியில் என் தந்தை வசிக்கின்றார். அதன் மறுபாதி காலியாக இருக்கின்றது. அல்லாஹ் எனக்கு குழந்தைச் செல்வங்களோடு நிறைய சொத்துக்களையும் தந்துள்ளான், இதனால் வீட்டை காலியாக வைத்திருக்க விரும்பவில்லை. நான் இன்று பள்ளிவாசலில் அஸர் தொழுதுவிட்டு முதலாவது வெளியே வரும் மனிதருக்கு அதனை கொடுப்பேன் என்ன நிய்யத்தோடு வந்தேன். நான் உங்களை அதற்காக கண்டுகொண்டேன். இப்போது எனது வேண்டுகோள் எல்லாம் அவ்வீட்டின் அறைவாசியை எனது பரிசாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான்.”


“நாங்கள் பணம் ஏதும் செலுத்தாமல் வீட்டைப்பெர தயங்கினோம். இதனை அறிந்த அம்மனிதர், “நீங்கள் பணம் தரவேண்டும் என விடாபிடியாக விரும்புவதாக இருந்தால், உங்களால் இலகுவாக தரமுடியுமான ஒரு தொகையை தாருங்கள்’ என்றார்.நாங்கள் பல வழிகளில் கிட்டத்தட்ட 8000 ரியால்களை சேகரித்தோம். அப்பணத்தை அந்த நல்லமனிதருக்கு கையளித்தோம். இப்போது நாங்கள் ரியாத் நகரில் பெரும்பணக்காரர்கள் வாழும் ஒர் இடத்தில் ஒரு வீட்டின் அறைவாசிற்கு சொந்தக்காரராக இருக்கின்றோம். யாரெல்லாம் அல்லாஹ்விடம் பணிவாகவும் இதயசுத்தியோடும் பிராத்திக்கின்றார்களோ அவர்களின் பிராத்தனைக்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான் என்பது மிகவும் உண்மையானது,” 


“ஆனாலும் ஒரு விடயம் எனக்கு புரியாமலேயே இருந்தது. நான் அல்லாஹ்விடம் ஆற்றுக்குப்பக்கத்தில் ஒரு வீட்டைக்கேட்டேன், ஆனால் இந்த வீட்டிற்கு அருகாமையில் ஆறு இல்லை அது ஏன் என்பதுதான். இது விடயமாக, அல்லாஹ்வின் அடியான் அவனிடம் கேட்கும் விடயங்களை கொடுப்பானா? இல்லையா? எனமார்க்க அறிஞ்ஞரிடம் கேட்டேன்.நான் அவனிடம் ஆற்றங்கரையில் வீட்டைக்கேட்டேன், ஆனால் பக்கத்தில் ஆறு இல்லாத வீட்டை அவன் எனக்கு அருளினான் என்றேன்.”


“எனது உறுதியான இறைவிசுவாசத்தை கண்ட அவ்வறிஞ்ஞர் ஆச்சரியமடைந்தார். அவர் என் புதிய வீட்டிற்கு முன்னால் என்ன இருக்கின்றது எனக்கேட்டார். நான் அதற்கு முன்னால் ஒரு அழகான பள்ளிவாசல் இருப்பதாகக்கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே என்னிடம், “அதுதான் ஆறு” என்றார்.


“அந்த மார்க்க அறிஞ்ஞர் நான் அல்லாஹ்விடம் கேட்ட ஆறு, என் வீட்டிற்கு முன்னால் இருக்கும் அழகிய பள்ளிவாசல்தான் என்றார். சுபஹானல்லாஹ்.”


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரின் தோழர்களுக்கு உபதேசித்த ஒரு ஹதீஸ் இருக்கின்றது:  


“ஒரு மனிதனின் வீடு ஆற்றுக்குப்பக்கத்தில் இருக்கின்றது. அம்மனிதர் அதில் ஐந்துவேளை குளித்து சுத்தமாகினால் அவரின் மேனியில் அழுக்கிருக்குமா?


 என அவர்களைப்பார்த்துக்கேட்டார்.அதற்கு அவர்கள்: “அல்லாஹ்வின் தூதரே,இல்லை,ஒரு அழுக்கும் அவரின் உடம்பில் தங்காது” என்றார்கள். ஐந்து வேளை தொழும் ஒருவரின் நிலையும் இதுதான், அவரின் பாவங்களை அல்லாஹ் அகற்றிவிடுவான்”


AKBAR RAFEEK


No comments

Powered by Blogger.