Header Ads



“நீ நினைத்தாயா நான் கோழி என்று, சரியான கோழியை பிடித்து முட்டையை போட்டுக்கொள்"


சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்த இளைஞன், அங்கு கடமையில் இருந்த யுவதியிடம் 10 முட்டைகளை சீக்கிரமாக தருமாறு கேட்டமைக்காக சற்று கோபமடைந்த யுவதி, இளைஞனின் முதுகில் ஏறிய சம்பவம், காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.


இந்த நாட்களில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் பல கடைகளில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இரண்டொரு கடைகளில் மட்டுமே முட்டை விற்பனை செய்யப்படுகின்றது அதுவும் இரகசியமாகவே விற்பனைச் செய்யப்படுகின்றது.  


அவ்வாறு இரகசியமாக முட்டைகளை விற்பனைச் செய்யும் கடைக்குச் சென்றிருந்த இளைஞன், அங்கு கடமையில் இருந்த யுவதியை அழைத்து, 10 முட்டைகளை விரைவாக போட்டு தருமாறு கேட்டுள்ளான்.


யுவதியோ ஒவ்வொரு முட்டைகளாக மெதுவாக முட்டைகளை எடுத்து பைக்குள் மெதுவாக வைத்துக்கொண்டிருந்தாள்.


அதனை பார்த்து கோபமடைந்த இளைஞன்,  அந்த யுவதியின் அருகே சென்ற  விரைவாக 10 முட்டைகளை போட்டுத்தருமாறு கேட்டுள்ளான்.


அதனை கேட்ட யுவதி, கொஞ்ச நேரம் அந்த இளைஞனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


முகத்தில் என்ன ஈ ​ஓடிடுகிறதா?, வேடிக்கை பார்க்காது, முட்டைகளை அவசரமாக போட்டுத்தருமாறு கொஞ்சம் சத்தமாக அவ்விளைஞன் யுவதியிடம் கேட்டுள்ளான்.


ஆத்திரமடைந்த  அந்த யுவதி, பேயாட்டம் ஆடிவிட்டாள்.


“நீ நினைத்தாயா? நான் கோழி என்று, நீ சரியான கோழியை பிடித்து முட்டையை போட்டுக்கொள்,  எனக் கூறி, முட்டைகளை போட்டுக்கொண்டிருந்த பேக்கை முட்டை பெட்டிக்குள் போட்டுவிட்டு கடைக்குள் சென்றுவிட்டாள்.


வெட்கமடைந்த இளைஞன் முட்டைகளை வாங்காமலே திரும்பிவிட்டான். Tamilm

No comments

Powered by Blogger.