இலங்கை முஸ்லிம்கள், இந்துக்கள் குறித்து கவலைப்படும் அமெரிக்கா
இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுஆவா ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில மதத் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்
ஆம், இலங்கை முஸ்லிம்களின் மதச்சுதந்திரம் பாதிக்கப்படுவது பற்றி அமெரிக்கா கவலை கொள்ள முன்னர், எந்த வித நியாயமுன்றி அநியாயமாக கண்ட கண்ட இடங்களிலெல்லாம் பலஸ்தீன், காஸா பகுதிகளில் இஸ்ரவேல் கொலைப்படைகள் முஸ்லிம் சிறார்கள், பெண்கள், பிள்ளைகள், வளர்ந்தவர்கள் என அனைவரையும் துப்பாக்கி வெடிகள், குண்டுககள் தாக்கி கொலை செய்யும் போது அது அமெரிக்காவுக்கு பாவமாகவோ, படுகொலைகளாகவே தென்படுவதில்லை. அதற்கு அமெரிக்கா காட்டும் நியாயம் அமெரிக்க- இஸ்ரவேல் உறவுகளைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா நடந்துகொள்ளக்கூடாதாம். அமெரிக்காவின் நயவஞ்சக இரட்டைவேடம் இங்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ReplyDelete