முனவ்வராவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது
கம்பளை அல்பிட்டிய பிரதேசத்தில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பாத்திமா முனவ்வரா என்ற யுவதி சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர், சடலம் இன்று -14- உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், சற்றுமுன்னர் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்ற 22 வயதான குறித்த யுவதி காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தினை பொலிஸார் அடையாளம் கண்டிருந்தனர்.
Post a Comment