முஸ்லிம் விவகாரங்களில், பங்காற்ற அலி சப்ரி அழைப்பு
ஆர். பி. எஸ். எல். கொன்சோட்டியம் அமைப்பின் முதலாவது வருடாந்த பொதுக் கூட்டம் மருதானை சாஹிராக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இவ்வமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி பிரதான உரையினை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வு உப தலைவர் வஸீர் முக்தார் தலைமையில் “முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இந்தக் கருத்தரங்கின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் பேரியல் அ~;ரப் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, முன்னாள் வெளிநாட்டுத் தூதுவரும் முன்னாள் கொழும்பு மாநகர முதல்வருமான உமர் காமில் , தென்கிக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூப் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு மாக்கச் சொற்பொழிவினை பேருவளை ஜாமிய்யா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் அ~;n~ய்க் அகார் முஹமத் உரையாற்றினார். ஹக்கீம் அபூபக்கர் இந்நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார். நன்றியுரையினை சட்டத்தரணி ரிஸ்வி மரைக்கார் நிகழ்த்தினார்.
இதன் போது பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எம். எம். எம். நாஜிம், பேராசிரியர் நௌபல், தொழிலதிபர் முஸ்லிம் சலாஹ{தீன், முன்னாள் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தலைவர் சஹீட். எம். ரிஸ்மி, முன்னாள் கண்டி மாநகர உப தவிசாளர் இலாஹி ஆப்தீன், உப தலைவர் சைபுதீன் ஹனிபா, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சாமிலா தாவூத், இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் பொறியியலாளர் எம். எம். எம் முனவ்வரா பேராதனை பல்கலைக்ககழத்தின் புவியல் துறை முது நிலை விரிவுரையாளர் எம். எஸ். எம். ராசிக் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி தாசிம் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்;து கொண்டனர்.
இதில் ஆர். பி. எஸ். எல். கொன்சோட்டியம் அமைப்பிற்கான விசேட இணைத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணிமாயுமான சலீம் மசூப் தென்கிழக்குப் பல்லைக்கழக வேந்தர் பாயிஸ் முஸ்தபா ஆகியோர் கரங்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்பால் அலி
Post a Comment