எமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் இல்லை, தமது அரசியல் வாழ்வுக்கு முடிவைத் தேடிக்கொள்வர்
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் கட்சியில் இருந்து வெளியேறுவதால் எமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
ஹரிசன் தவறான முடிவை எடுத்து தனது அரசியல் வாழ்வுக்கு முடிவைத் தேடிக்கொண்டுள்ளார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் அறிவிப்பு விடுத்துள்ளமை தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார்.
Post a Comment