Header Ads



ஒன்லைனில் பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு - வர்த்தமானி வெளியானது


ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.


அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது எந்த பிரதிநிதித்துவத்தையும் மறுப்புகளையும் செய்யக்கூடாது.


குறித்த வர்த்தமானி அறிவிப்பில், ஒரு பொருளின் உண்மையான கொள்முதல் விலையானது, ஒன்லைன் வர்த்தக தளத்தில் காட்டப்படும் விலைக்கு சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


மேலும், ஆர்டர் உறுதிப்படுத்தல், போக்குவரத்து ஏற்பாடுகள், ஆர்டர்களை ரத்து செய்வதற்கான உரிமை ஆகியவையும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

No comments

Powered by Blogger.