Header Ads



வெளிநாட்டில் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட, இளைஞர்கள் பற்றி வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்


வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கை இளைஞர்கள் அடிமைகளாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதன்படி, தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட மேலும் எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் தற்போது தெரிய வந்துள்ளது.


இந்த எண்மரில் மாரடைப்புக்கு உள்ளான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த 8ஆம் திகதி அங்குள்ள இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது.


மேலும் இந்த இளைஞருக்கு அவசர இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிய வந்துள்ளது.


இலங்கையைச் சேர்ந்த இவர்களை மீட்பதற்கு உடனடியாக தலையிடுமாறு மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவித்துள்ளது.


மியன்மார் அரசாங்கத்துடன் கலந்துரையாடிக் குறித்த இளைஞர்களை மியன்மார் தூதரகத்தில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. Tw

No comments

Powered by Blogger.