கண் சத்திர சிகிச்சை திடீரென நிறுத்தம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10 நோயாளர்களின் கண்பார்வை குறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் மஹேந்ர செனவிரத்ன தெரிவித்தார்.
சத்திர சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்பட்ட மருந்துகளினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மஹேந்ர செனவிரத்ன கூறினார்
Post a Comment