இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் சலுகை
அதற்கமைய, அனுப்பப்படும் பணத்தின் அடிப்படையில் கூடுதல் வரிச்சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணி பணத்திற்கு வரி அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகை ஐந்து வகைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதற்கமைய 2,400 அமெரிக்க டொலர் முதல் 4,799 அமெரிக்க டொலர்கள் வரையில் அனுப்பிய தொழிலாளர்கள் 600 அமெரிக்க டொலர் கூடுதல் வரிச் சலுகையைப் பெறலாம்.
4,800 அமெரிக்க டொலர் முதல் 7,199 அமெரிக்க டொலர்வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 960 அமெரிக்க டொலர் கூடுதல் வரிச் சலுகையும், 7,200 அமெரிக்க டொலர் முதல் 11,999 அமெரிக்க டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 1,440 அமெரிக்க டொலர் கூடுதல் வரிச் சலுகையும் கிடைக்கும்.
மேலும், 12,000 அமெரிக்க டொலர் முதல் 23,999 அமெரிக்க டொலர் வரை பணம் அனுப்பிய தொழிலாளர்கள் 2,400 அமெரிக்க டொலர் கூடுதல் வரிச் சலுகையைப் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
24,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமான தொகையை அனுப்பிய தொழிலாளர்கள் 4,800 அமெரிக்க டொலர்களை மேலதிக வரிச்சலுகையாகப் பெற முடியும்.
ஒரு வருட காலத்திற்குள் உரிய பணத்தை இந்நாட்டிற்கு அனுப்பிய அனைவருக்கும் நிவாரணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இன்று முதல் வங்கிகள் ஊடாக சட்டப்பூர்வமாக பணம் அனுப்பிய தொழிலாளர்கள் நிவாரணம் பெற முடியும் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment