Header Ads



என் மகளுக்கு எந்த பாவியோடும் காதல் இல்லை, 9 A சித்திகளை பெற்றிருப்பாள்


என் மகள் எந்த பாவியோடும் காதல் வயப்பட்டதில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன் என களுத்துறையில் ரயில் பாதையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 16 வயதான மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.


எனது குழந்தைக்கு அவ்வாறான தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யுவதி உட்பட மூவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


களுத்துறை மகளிர் வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்விக் கற்றுவரும் நாகொட பகுதியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தாய் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


“என் குழந்தை படிப்பதில் சிறந்தவள். ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்களை பெறுவார்.


சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது ஏ சித்திகளை பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.


என் மகள் யாருடனும் காதல் தொடர்பில் இருந்திருக்க மாட்டார். என் குழந்தை அப்படிப்பட்டவர் என்று நான் நினைக்கவில்லை.


இதுவரை கண்டிராத பாவியால் என் குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளால், தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.


சம்பவத்தன்று மதியம் வீட்டின் அருகே உள்ள கோவிலில் எனது மகள் தங்கியிருந்தாள்.


என் குழந்தைக்கு 16 வயது தான் ஆகின்றது. அவள் 29 வயது இளைஞனுடன் விடுதிக்கு செல்லும் ஆள் கிடையாது.


மது அருந்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், எனது மகள் மது அருந்தும் பெண் அல்ல என்றே கூறுகிறேன்.


என் மகளுக்கு 16 வயது ஆவதால் அவளால் விடுதிக்குள் நுழைய முடியாது. எனவே, அப்பகுதியில் உள்ள மற்றொரு பெண்ணிடம் அடையாள அட்டை கொண்டு எனது மகளை விடுதிக்கு அழைத்துச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளனர்.


இப்போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீதி வழங்குமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம்.


எனது மகளுக்கு நேர்ந்த குற்றம் இந்த நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்று இறுதியாக வேண்டுகோள் விடுப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Oruvan)

No comments

Powered by Blogger.