Header Ads



பலஸ்தீனியர் தமது நாட்டை இழந்து 75 ஆண்டுகள் - இலங்கையர்களுக்கு நன்றி கூறும் தூதுவர்

பலஸ்தீனியர் தமது நாட்டினை இழந்து 75 வது ஆண்டு நிறைவு நேற்று15 பலஸ்தீன் இலங்கை நட்புரவு இயக்கத்தின் அனுசரனையில் நேற்று 15.05.2023 கல்கிசை கடற்கரையில் பலஸ்தீன் இலங்கை நட்புரவினைக் கொண்ட  கொடிகளுடன் பலுன்கள் வானத்தில் துாதுவர்கள் மற்றும் அங்கத்தவர்களினால் பறக்க விடப்பட்டன.


இந் நிகழ்வுக்கு பலஸ்தீன் இலங்கை நாட்டுக்கான துாதுவர் கலாநிதி சுகைர் ஹம்துல்லா செய்யட் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர் ்இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முன்னால் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பிணர் விமல் ரத்னாயக்க, சவுதி அரேபியா, ஓமான், ஈரான், ரசியா, பங்களதேஸ், எகிப்து. இந்தோனோசியா, துருக்கிய ஆகிய நாடுகளின் துாதுவர்களும் பிரநிதிகளும் கலந்து கொண்டு இந் நிகழ்வில் இணைந்து கொண்டு பலஸ்தீன் ்விடுதலை பெற பிராத்தித்தார்கள். 


அத்துடன் இங்கு உரையாற்றிய பலஸ்தீனத் துாதுவர்  இலங்கையில் உள்ள சகல இனங்களும சகல அரசாங்கமும் நீண்ட காலமாக பலஸ்தீன் விடுதலைக்காக ஆதரவு வழங்கி வருகின்றாா்கள். அதற்கான நன்றியறிதலைத் அவர் தெரிவித்துக் கொண்டார்.


957 ஆயிரம் பலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக அவர்களது வாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள், இவர்கள் 1948 காலப்பகுதியில் இருந்து வாழ்ந்த வந்த காணிகளாகும். 531 பலஸ்தீனியக் கிராமங்கள்  முற்றாக அழிக்கப்பட்டுளளன. 35வீதமான பலஸ்தீனியர்கள் 58 அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.150,000 பலஸ்தீனியர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர்.எனத் துாதுவர் அங்கு உரையாற்றினார்.


(அஷ்ரப் ஏ சமத்)








No comments

Powered by Blogger.