காலாவதியான டின் மீன்களை விற்ற, சீன பிரஜை உட்பட 6 பேர் பிடிபட்டனர் - பெறுமதி 80 இலட்சம்
காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment